மறைந்தார் கோபிநாத்..! சே குவேரா, பிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட முதல் இந்திய பத்திரிக்கையாளர் இவர் என்பது தெரியுமா..?  

ஏ.என்.ஐ நிறுவனத்தின் செய்தி நிறுவனத்தின் தமிழக செய்திப்பிரிவின் தலைமைப் பொறுப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான கோபிநாத் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறையில் திறம்பட செயலாற்றி வந்த இவரது மறைவு, கேட்போர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தலை பற்றி நேரடியாகவே களத்தில் இருந்து செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக எடுத்துக் கொடுத்தவர் கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த சிறப்பம்சத்தை என்றும் பறைசாற்றும் ஒரு விஷயமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

இதுதவிர கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா இவர்களையெல்லாம் பேட்டி எடுத்த முதல் இந்திய பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரியவர் கோபிநாத். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் அவர்களின் இறப்பு இந்தியாவிற்கு ஒரு இழப்பாக பார்க்கப்படுகிறது. 

இவரது மறைவிற்கு நாடு முழுவதிலும் இருந்து பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.