புதுச்சேரியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குளியல் ஷாம்புவை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புகழ்பெற்ற ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய அஸ்பெஸ்டோஸ்   மூலக்கூறுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது என்பதால் அதை தடை செய்ய அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் புற்றுநோய் பாதித்த 22 பெண்களுக்கு 470 கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மிசோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்பு விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. இருப்பு வைத்திருந்தால் அகற்றுமாறும், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு அறிவுறுத்தியது.

 

இதன்படி, புதுச்சேரியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவிற்கு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு தடை விதித்தது. அந்த நிறுவனத்தின் ஷாம்புவை விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.