வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி ஜோஸ்வா. இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டவாறு ஒரு மாணவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு இன்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் அளித்தனர்.

விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்  மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

உயிரிழந்த மாணவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  எம்.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர் ரிஷி ஜோஸ்வா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து வேலூரில் உள்ள ரிஷி ஜோஸ்வாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே முத்து கிருஷ்ணன் என்ற முதுகலை பட்டதாரி மாணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல் ரோகித் வெமூலாவும் தற்கொலை கொண்டார். ஜேஎன்யூவில் மாணவர்கள் தற்கொலைகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.