மகாராஷ்டிராவில் ஆதிக்கம் செலுத்தும் JN.1 மாறுபாடு.. ஆனால் டெல்லியில் நடப்பதே வேற.. அதிர்ச்சி தகவல்..

மகாராஷ்டிராவில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஜே.என்.1 மாறுபாடு மாறி உள்ளது.

JN.1 emerges predominant variant in maharastra 3 more variants circulating in delhil Rya

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜே.என்.1 மாறுபாடு காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநிஅல் அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜே.என்.1 மாறுபாடு மகாராஷ்டிராவில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறி உள்ளது. அங்கு புதிதாக 21 பேருக்கு ஜே.என்.1 பாதிப்பு உறுதியாகி உள்ளதால் அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 249ஆக உயர்ந்துள்ளது. எனினும் அனைத்து நோயாளிகளுக்கும் லேசான அறிகுறிகளே இருந்ததாகவும், அனைவரும் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மகாராஷ்டிராவில் ஜே.என்.1 மாறுபாடு ஆதிக்கம் செலுத்தி வரும் மாறுபாடாக மாறி உள்ளதாகவும், இந்த மாறுபாடு பரவத்தொடங்கிய பிறகு ஏற்கனவே இருந்த XBB  மாறுபாடு பாதிப்பு குறைந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சுறுத்தும் JN.1 மாறுபாடு.. பிரிட்டனில் மீண்டும் கொரோனா அலை ஏற்படலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..

எனினும் ஜே.என்.1 தொற்று உறுதியானவர்களுக்கு தீவிரமான நோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அடுத்த சில வாரங்களில் தொற்று பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனிடையே தலைநகர் டெல்லியில் 21 பேருக்கு ஜே.என்.1 மாறுபாடு இருப்பது உறுதியாகி உள்ளது. தொற்று உறுதியான நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்தல் மூலமே குணமாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிட் நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாகவும் அவர்கள் 2-3 நாட்களில் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைவலி, சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, சோர்வு, தும்மல், மூச்சு விடுவதில் சிரமம், வாசனை இழப்பு, வாந்தி ஆகியவை இந்த மாறுபாட்டின் அறிகுறிகள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் ஜே.என்.1 மாறுபாடு தவிர BA.2, XBB.2.3, HV.1 and HK.3 போன்ற மாறுபாடுகளும் பரவி வருகிறது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் 23 மாதிரிகளுக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் 8 பேருக்கு ஜே.என்.1 மாறுபாடு இருப்பதும் 11 பேருக்கு பி.ஏ.2 மாறுபாடு இருப்பதும், இருவருக்கு ஹெச்.கே.3 பாதிப்பு இருப்பதும் தலா ஒருவருக்கு , XBB.2.3, HV.1 மாறுபாடு இருப்பதும் உறுதியாகி உள்ளது.

கோவிட் JN.1 மாறுபாடு: இவை தான் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள் முக்கிய தகவல்..

இதில் HV.1 மாறுபாடு தற்போது ஜே.என்.1 மாறுபாட்டுடன் இணைந்து அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாறுபாடாக இருக்கிறது. இந்த மாறுபாடு கடந்த ஆண்டு கோடைகாலம் முதலே அங்கு பரவி வருகிறது. பி.ஏ.2 என்பது 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மாறுபாடாகும். HK.3 என்பது கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்ட மாறுபாடாகும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios