கொரோனா தொற்று சோதனை நடத்தச் சென்ற மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்தவர்கள் மீது ஜிகாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை அடுத்துள்ள தத்பட்டி பாஹல் என்னும் கிராமத்தில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.  இதனையடுத்து அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா என, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். 2 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

 

அந்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது அப்பகுதி மக்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அவர்கள் அலறியடித்து டாக்டர்களும், செவிலியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பெண் டாக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

இந்தூர் மட்டுமல்ல, தமிழகத்தில் வாணியம்பாடி உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் இது நடக்கின்றது. இதனை அறியாமை என்பதா? அகங்காரம் என்பதா? மதப்பெரியோர்கள், தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?  ஏன் இவர்களிடத்தில் எடுத்து சொல்லி ஒத்துழைக்க செய்ய முன்வருவதில்லை? இவர்களின் இந்நிலைபாடு மற்றவர்கள் வெறுக்க எதுவாகாதா? என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.   

வீடியோவை பார்க்க: மருத்துவ பணியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்..! மத்திய பிரதேசத்தில் நடந்த பரிதாபம் வீடியோ..