நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், மும்பை-அகமபாதாபாத் இடையே ஜப்பான் நாட்டு உதவியுடன் மத்திய அரசு செயல்படுத்த இருந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை ஜப்பான் நாட்டு நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஆனால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசின் தேசிய அதிவிரைவு ரயில் போக்குவரத்துக் கழகம் தாங்கள் ஜப்பானின் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு கழகத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டோம். 

ஏறக்குறைய 1000 கோடி யென் கடன் தருவதாக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் ஆனால், பணத்தை அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், நிலம் கையகப்படுத்தும் பகுதிகளில் அதிகமான இழப்பீட்டை கொடுக்க நேர்வதாலும் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனால் ஜப்பான் நிறுவனம் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. 

இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரத்தில் ஏறக்குறைய ஆயிரம் விவசாயிகள் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேலும், ஜப்பான் நாட்டு தூதருக்கும் விவசாயிகள் தரப்பில் ஏராளமான கடிதங்கள் எழுதப்பட்டு, தங்களிடம் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களை பாருங்கள், நாங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்று பாருங்கள் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து, ஜப்பான் நிறுவனம் புல்லட் ரயிலுக்கு தருவதாக தெரிவித்த நிதியுதவியை நிறுத்திவைத்துள்ளது.

மத்திய அரசின் என்ஹெச்எஸ்ஆர்சிஎல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,  புல்லட் ரயில் திட்டத்துக்கு 10 பில்லியன் யென் கடன் அளிப்பது தொடர்பாகவும் இந்திய அரசு, ஜேஐசிஏ அமைப்புடன் கையொப்பமும் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், எந்தவிதமான நிதியுதவியும் அளிக்கப்படவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.