இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்.

பாஜகவின் முன்னாள் தமிழக தலைவரும், கட்சியின் தேசிய செயலாளருமான சி.பி ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15 ஆம் தேதி சி.பி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜார்க்கண்டின் புதிய ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

ஜார்க்கண்ட்டின் 11வது ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “மரியாதைக்குரிய பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றேன். ஜார்க்கண்டின் வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பாக விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்