Asianet News TamilAsianet News Tamil

கனரா வங்கி.. 538 கோடி ரூபாய் மோசடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அதிரடி கைது - முழு விவரம்!

கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில், பிரபல ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் இன்று வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அமலாக்க இயக்குனரகம் இன்று அவரிடம் விசாரணை நடத்தியது குறிப்படத்தக்கது.

Jet Airways founder Naresh goyal arrested who involved in 538 crore bank fraud ans
Author
First Published Sep 1, 2023, 11:49 PM IST

இந்த வழக்கின் விசாரணைக்காக கோயல் SFIO எனப்படும் Serious Fraud Investigationனின் தலைமை அலுவகத்திற்கு சென்றபோது, ED (அமலாக்கத்துறை) அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய புலனாய்வு முகமையின் முந்தைய இரண்டு சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 5ம் தேதி மும்பையில் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு புதிய விதி.. மத்திய அரசு விதித்த வருமான வரி விதிப்பு முறை - முழு விபரம் உள்ளே !!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு எதிராக மோசடி, சதி, நம்பிக்கை மீறல் மற்றும் பிற வழக்குகள் என்று கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி எழுத்துப்பூர்வமாக FIR தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சிபி ஐ தெரிவித்துள்ளது. 

அதேபோல கனரா வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பி. சந்தோஷ் கையெழுத்திட்ட புகாரில், அனிதா நரேஷ் கோயல், கவுரங் ஆனந்த ஷெட்டி, மேலும் அறியப்படாத சில ஊழியர்கள் மற்றும் பலர் தங்கள் வங்கிக்கு 538.62 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2019ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது.

விஸ்தாரா விமான சேவை நிறுவனம்.. ஏர் இந்தியாவுடன் இணைக்க CCI அளித்த ஒப்புதல் - முழு விவரம்!

Follow Us:
Download App:
  • android
  • ios