நாட்டில் உள்ள வங்கிகள், தபால்நிலையங்கள் மூலம் ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுக்களில் நானோ சிப்கள் இருக்கிறதா என்பது குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்க ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் (Nano GPS Chip) இணைக்கப்படுகிறது. இந்த நேனோ ஜிபிஎஸ் சிப் இயங்க எந்த சக்தியும் தேவை இல்லை. இது சிக்னல் பிரதிபலிப்பானாக செயல்படும், செயற்கை கோள்கள் மூலம் சிக்னல் அனுப்பட்டால், இந்த 2000 ரூபாய்தாள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் வரி எண் வரைக்குமான தகவல்களை பெறமுடியுமாம்.

பூமிக்கு கீழே 120 மீட்டருக்கு கீழே இந்த 2000 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்தாலும் கண்டு பிடித்துவிட முடியும். ரூபாய் நோட்டுக்கு சேதம் வராமல் நேனோ ஜிபிஎஸ் சிப்-ஐ நீக்குவது என்பது இயலாத காரணமாகும். இந்த ரூபாய் தாள்கள் குறித்து மற்றும் அதன் புகைப்படங்கள் குறித்து டூவிட்டர், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ரிசர்வ் வங்கி வெளியிடும், புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களில் நானோ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஹா.. ஹா..என சரித்துவிட்டு பேசுகையில், யார் உங்களுக்கு இதுபோன்ற தகவல்களை எல்லாம் கூறுகிறார்கள். இதற்கு முன் இதுபோன்ற செய்திகளை எல்லாம் நான் கேட்டது இல்லையே. அப்படி எந்த விதமான நானோ சிப்களும் ரூபாய் நோட்டுக்களில் இல்லை என்றார்.
