Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியை மேடையில் அமர வைத்து நேருவை புகழ்ந்த ஜப்பான் பிரதமர்...

Japans Prime Minister Shinshaw Abe said that my grandfather and my first Prime Minister Jawaharlal Nehru had a close friendship.
Japans Prime Minister Shinshaw Abe said that my grandfather and my first Prime Minister Jawaharlal Nehru had a close friendship.
Author
First Published Sep 15, 2017, 5:57 PM IST


என் தாத்தாவுக்கும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்தது என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்தார்.

இந்தியா-ஜப்பான் வருடாந்திர கூட்டுமாநாடு நடந்த போது, பிரதமர் மோடி மேடையில் இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரையும், நாட்டின் முதல்பிரதமர் குறித்து பேசி ஜப்பான் பிரதமர் அதிர்ச்சி அளித்தார்.

புல்லட் ரெயில் திட்டம்

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்க ஜப்பான் பிரதமர்ஷின்ஷோ அபே, அவரின் மனைவி அகி அபே 2 நாள் பயணமாக வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்தபின், குஜராத் மாநிலம், காந்தி நகரில் இரு நாடுகளுக்கு இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு நடந்தது. இதில் வர்த்தகம், தொழில் உள்ளிட்ட 15 வகையான ஒப்பந்தங்கள் கைப்யொப்பம்ஆகின.

இந்த நிகழ்ச்சியின் போது, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே பேசியதாவது-

நீண்ட நட்புறவு

என் குடும்பத்துக்கும், இந்தியாவுக்கும் தாத்தா காலத்தில் இருந்தே நெருங்கிய தொடர்பு  இருந்து வருகிறது. என்னுடைய தாத்தாவும் ஜப்பானின் முன்னாள் பிரதமருமான நோபுசிகி கிஷி கடந்த 1957ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார்.

அப்போது, அவருக்கு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறப்பான வரவேற்பு அளித்தார். அந்தநேரத்தில் நாங்கள் 2-ம் உலகப்போரில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருந்தோம்.

நெருங்கிய உறவு

அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் எனது தாத்தாவும், பிரதமர் நேருவும் கலந்து கொண்டனர். அப்போது,  அங்கு கூட்டத்தில் கூடி இருந்த மக்களிடம், பேசிய நேரு “ இவர்தான் ஜப்பான் பிரதமர்நோபுசிகி கிஷி. மிகவும் பெருமைக்குரியவர் என்று மக்களிடம் பெருமையாகக் கூறினார்.

2ம் உலகப்போருக்கு பின்பும், இந்தியாவுக்கும், ஜப்பானுக்கு நெருங்கிய உறவு இருந்தது. எனது தாத்தாவும், நேருவும் தனிப்பட்ட முறையில் நட்புறவோடு இருந்தனர்.

மிகப்பெரிய கூட்டம்

கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவுக்கு எனது தாத்தா இந்தியாவுக்கு பயணித்தபோது, நான் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர் என்னிடம் பேசுகையில், “ நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, என்னை மிக் பெரிய மக்கள் கூட்டத்தின் முன் நிறுத்தி பிரதமர் நேருஅறிமுகப்படுத்தினார். அங்கு கூடியிருந்த மிகப்பெரிய கூட்டத்தை என் வாழ்நாளில் கூட நான் பார்த்தது இல்லை என்று கூறினார்.

வலுவான உறவு

என் தாத்தா கிஷியும், இந்தியாவை மிகவும் நேசித்தர். இந்திய மக்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் நேரு என் தாத்தாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.  என் தாத்தாவைப் போலவே, எனது காலத்திலும், இந்தியாவுடனான நட்பு பலமாக, வலுவாக தொடரும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேடையில் அமர்ந்து ஜப்பான்  பிரதமர் அபேயின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த பிரதமர் மோடி, அதை கை தட்டி ரசித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios