இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர்களை ( 5 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தில்லி வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கஷிடா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஜப்பான் பிரதமர் பியூமியோ கஷிடா இரண்டு நாள் பயணமாக டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்தியா - ஜப்பான் டுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை நிறுவி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு இன்று நடைபெற்றது.கடந்த 3 ஆண்டுகளாக இரு நாடுகளிடையேயான உச்சி மாநாடுகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாட்டை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த மாநாட்டில், முதல்முறையாக கஷிடோ கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக இந்த மாநாடு கடந்த 2018 ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில், புது டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னதாக, டெல்லி இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பியுமியோ கஷிடோ சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவு மற்றும் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் கிஷிடா இடையேயான உச்சிமாநாட்டின் நிகழ்ச்சியில் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேசியதாக தெரிவித்தார்.

இதனிடையே இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் தனது முதலீட்டு இலக்கை 5 டிரில்லியன் யென் அல்லது ₹ 3.2 லட்சம் கோடியாக (42 பில்லியன் டாலர்) உயர்த்தும்” என்று பிரதமர் மோடி அறிவித்தார். 300 பில்லியன் யென்(ஜப்பான் பண மதிப்பு) கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்ததுடன் கார்பன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் எரிசக்தி ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2014 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த போது, ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் முதலீடு மற்றும் நிதியுதவியை அறிவித்தார்.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில், சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், பல்வேறு விஷயங்களில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்று ஐப்பான் பிரதமர் தெரிவித்தார்.
