ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. வீடு புகுந்து காவலர் சுட்டுக்கொலை - அதிகரிக்கும் தீவிரவாதிகளின் அட்டகாசம்!
Srinagar : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று அக்டோபர் 31ம் தேதி, தனது வீட்டுக்குள் இருந்த காவலர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். பாரமுல்லாவில் உள்ள கரல்போரா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கான்ஸ்டபிள் குலாம் முகமது தார் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"காயமடைந்த காவலர் வீரமரணம் அடைந்தார். அந்த தியாகிக்கு எங்களது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம், இந்த முக்கியமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்கிறோம். அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கான்பூரில் 17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் - தவறை மறைக்க நடந்த பலே வேலை!
அந்த சம்பவம் நடந்த கிராமம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது மற்றும் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். புல்வாமாவில் நேற்று புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகரில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடப்பட்டு காயமடைந்தார். ஞாயிற்றுக்கிழமை ஈத்கா பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மஸ்ரூர் அகமது வானி மீது 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதும் நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் ஓராண்டில் 4.61 லட்சம் சாலை விபத்து: தமிழ்நாடு தான் டாப்!
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து புல்வாமா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சோதனையை, பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள அனைத்து முக்கிய சந்திப்புகளிலும், நகரைவிட்டு வெளியேறும் இடங்களிலும் நடமாடும் வாகன சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D