தமிழகம் வந்த ஜம்மு காஷ்மீர், லடாக் மாணவர்கள்.! ஆரோவில்லை சுற்றிப்பார்த்து உற்சாகம்

ஒரே பாரதம், உன்னத பாரத திட்டத்தின் கீழ் காஷ்மீர் மற்றும் லடாக் மாணவர்கள் தமிழகத்தில் கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். ஆரோவில்லில் SAIIER மையத்தை ஆராய்ந்து, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அனுபவித்தனர்.

Jammu Kashmir and Ladakh students who came to Tamil Nadu Excited to tour Auroville KAK

தமிழகம் வந்த காஷ்மீர் மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கலாச்சாரங்களை அறியும் வகையில் கல்வி சுற்றுலா பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் மாநிலங்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதையும் இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஒரே பாரதம், உன்னத பாரத திட்டத்தின் கீழ்  காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் யுவ சங்கத்தைச் சேர்ந்த 60 பேர் தமிழகம் வந்துள்ளனர். பாரம்பரியங்கள், வரலாறுகள்  மற்றும் நாட்டை ஒன்றுபடுத்தும் அடிப்படை திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய மாணவர்களிடம் ஆழமான புரிதலை வளர்க்கும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Jammu Kashmir and Ladakh students who came to Tamil Nadu Excited to tour Auroville KAK

ஆரோவில்லில் மாணவர்கள்

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்யவும், வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கண்ணோட்டங்களுடன் ஈடுபடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் தமிழ் மொழியின் நுணுக்கங்களை ஆராய்வதற்கும், மாநிலத்தின் வண்ணமயமான பாரம்பரியங்களை பார்த்து ரசிப்பதற்கும், உள்ளூர் மக்களுடன் தொடர்பை வளர்ப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தனித்துவமான உலகளாவிய நகரமான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில்லிற்கு மாணவர்கள்பயணத்தை மேற்கொண்டனர். இங்கு, அவர்கள் புகழ்பெற்ற SAIIER (ஸ்ரீ அவுரோபின்டோ சர்வதேச கல்வி மையம்) ஐ ஆராய்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி மற்றும் கருத்தியல் குறித்து தெரிந்து கொண்டனர்.  

Jammu Kashmir and Ladakh students who came to Tamil Nadu Excited to tour Auroville KAK

இளைஞர்கள் முகாம்

மேலும் ஆரோவில்லில் நடத்தப்படவுள்ள எதிர்கால இளைஞர் முகாம் திட்டங்களில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர். இந்த கல்வி சுற்றுலாவில் சென்னை தேசிய தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் உஷா நடேசன், ஜம்மு ஐஐஎம் பேராசிரியர்கள் ஜெகன்நாத், ஹர்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios