Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீர் விவகாரம்... உச்சநீதிமன்றம் எடுத்த திடீர் முக்கிய முடிவு..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jammu issue...Supreme Court Refers Article 370 Cases to 5-Judge Constitution Bench
Author
Delhi, First Published Aug 28, 2019, 12:49 PM IST

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யம் 370 மற்றும் 35-ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டதுடன், ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. jammu issue...Supreme Court Refers Article 370 Cases to 5-Judge Constitution Bench

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த மனுவில் காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு சட்டவிரோதமானது என கூறியிருந்தனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

 jammu issue...Supreme Court Refers Article 370 Cases to 5-Judge Constitution Bench

அப்போது, ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்குகள் அனைத்தும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே இந்த மனுக்கள் மீது விசாரணை தொடங்கும் எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios