இந்திய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த ஜம்மு-காஷ்மீர்!

பொதுத் தேர்தலில் அதிக அளவு வாக்களித்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது

Jammu and kashmir makes an indelible mark on India electoral history with highest voter turnout smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்ட நிலையில், 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை முதல் 5 கட்ட தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி, கடந்த 20ஆம் தேதியோடு அம்மாநிலத்தின் 5 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது.

இந்த நிலையில், இந்திய தேர்தல் வரலாற்றில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீரில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் 5 மக்களவைத் தொகுதிகளையும் சேர்த்து 58.46 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்கப் பங்கேற்பு இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களின் வலுவான ஜனநாயக உணர்வு மற்றும் குடிமை ஈடுபாட்டிற்கு ஒரு சான்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக வாக்குச்சாவடிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜூன் 1ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஜம்மு  காஷ்மீர் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இந்த சாதனை 2019ஆம் ஆண்டு முதல் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிப்பு, சி-விஜில் புகார்கள் மற்றும் பேரணிகளுக்கான 2455 கோரிக்கைகள் இடம் பெற்றுள்ள சுவிதா இணையதளம் ஆகியவை தயக்கமின்றி தேர்தல் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார். இந்தத் தீவிர பங்கேற்பு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பெரிய சாதகமாகும், இதனால், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வளரும் என்றும் அவர் கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் 50.86% வாக்குகள் பதிவாகியிருப்பது ஜனநாயக நடைமுறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எதிரொலிக்கிறது. வாக்களிப்பு சதவீதம் 2019ஆம் ஆண்டு 19.16% ஆக இருந்த நிலையில், அது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜௌரி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் முறையே 38.49%, 59.1% மற்றும் 54.84% அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில்  மிக அதிகமாகும். யூனியன் பிரதேசத்தின் மற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் முறையே 68.27% மற்றும் 72.22% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios