ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயணிகள் வந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயணிகள் வந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.