Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவின் ’ஹாட்ஸ்பாட்’ ஆன ஜமாத்.. ’தலை’நகரில் தொப்பி போட்டு மறைத்த மதகுருக்கள்.. கதிகலக்கும் ட்ராக் ஹிஸ்டரி!

டெல்லி நிஜாமுதீன் தப்ளிக் மையத்தில் இருந்த 24 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருப்பது அடிவயிற்றை கலக்கியிருக்கிறது. 

Jamaat, Corona's Hotspot
Author
Delhi, First Published Mar 31, 2020, 4:29 PM IST

டெல்லி நிஜாமுதீன் தப்ளிக் மையத்தில் இருந்த 24 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருப்பது அடிவயிற்றை கலக்கியிருக்கிறது. 

டெல்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள ஜமாத்தில் நடந்த மாநாட்டில் தமிழகத்தில் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டதாக தகவல் வெளியானது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத் தற்போது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மாதம் இந்த ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளனர்.

Jamaat, Corona's Hotspot

மார்ச் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்த ஜமாத்தில் நடந்த மதக் கூட்டதில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் மூலம் கொரோனா பரவியது தற்போது தெரியவந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கூட்டம் முடிந்த பின்னர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர். தமிழகம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணமாகியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் மாநில அரசுகள், அதில் கலந்து கொண்ட தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை கண்காணிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது.Jamaat, Corona's Hotspot

ஜமாத்தைச் சேர்ந்த சுமார் 85 மத போதகர்கள் டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று டெல்லியில் உறுதி செய்யப்பட்ட 25 புதிய கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 18 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். இதனால் ஜமாத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் அனைவரையும் டிராக் செய்துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. நேற்று வரை அந்த ஜமாத்தில் சுமார் 1,500 பேர் வரை இருந்ததாகவும் அதில் சுமார் 300 பேருக்கு காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேருந்துகள் மூலம் அறிகுறி உள்ளவர்கள் நகரத்தில் பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Jamaat, Corona's Hotspot

ஜமாத் இருக்கும் பகுதி முழுவதையும் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அந்தப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் கூட்டம் முடிந்த பின்னர் நாட்டில் பிற பகுதிகளில் உள்ள சில மசூதிகளுக்கும் சென்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்களில் 10 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். அதில் 6 பேர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தமிழகம், கர்நாடகா மற்றும் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த தலா ஒருவர் என 9 இந்தியர்களும் ஒரு வெளிநாட்டு மத போதகரும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜமாத்தில் இருந்த 200 பேர் நேற்று லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. பரிசோதனை முடிவுகள் வெளியாகும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டதால் தமிழகமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். அதில், 980 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் விமானம், ரயில்கள் மூலம் தமிழகம் திரும்பினர். இதனால் கொரோனா பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக இவர்கள் அனைவரும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

Jamaat, Corona's Hotspot

டெல்லி கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் மார்ச் 21 முதல் 23-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது நிஜாமுதீன் பகுதியில் இருந்த அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி தற்போது ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில் டெல்லி கூட்டத்தில் 250 வெளிநாட்டினர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதிக்காதது தான் இத்தனை பெரிய பாதிப்புக்கு காரணம் என டெல்லி நிஜாமுதீன் பகுதி குடியிருப்பு நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios