இந்தியாவின் 68வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கொத்தளம் பகுதியில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தேசிய கொடியற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் தலைநகர் டெல்லியின் நடந்த குடியரசு தின விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றினார். பின்ன, முப்படை அணிவகுப்பு மரியாதை நடந்தது. பல்வேறு மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது வழக்கம்.

இதை தொடர்ந்து தமிழக கலாச்சாரமான கரகாட்டம், நாதஸ்வர கச்சேரியுடன் தமிழக அலங்கார வாகனம் சென்றது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஆனால், கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க செய்த ஜல்லிக்கட்டு போட்டியை நினைவூட்டும் சின்னம் அந்த வாகனத்தில் இடம் பெறவில்லை.

தமிழக அலங்கார வாகனத்தில் ஜல்லிக்கட்டுக் காளை இடம்பெறும் என எதிர்பார்த்து, ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில், தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் அனைத்து கிராமிய மற்றும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு கரகாட்டக் கலைஞர்கள் நடனமாடியபடியும் நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடியும் சென்றனர். மேலும், ஒரு கலைஞர் காளி வேடம் தரித்தபடி அலங்கார வாகனத்தில் இருந்தார். இதை பார்த்த பலரும் பாராட்டினர். மனம் கவர்ந்தனர்.
