பாலகோட் பகுதியில் இந்தியா விமானப்படை குறிவைத்து தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் புகைப்படத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 13 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட் பகுதியில் புகுந்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள், ஆயுத கிடங்குகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தாக்குதல் நடத்திய இடங்களின் புகைப்படங்களை உளவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் படிக்கட்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு தேசியக்கொடி வரையப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இன்று நடைபெற்ற தாக்குதலில் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகளான மவுலானா அம்மார், மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சயீப், மூத்த சகோதரன் இப்ராஹிம் அசார் ஆகியோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முஃப்தி அசார் கான் என்பவன் தான் புல்வாமா தாக்குதலுக்கு தலைமை தாக்கியவன் குறிப்பிடத்தக்கது.