Asianet News TamilAsianet News Tamil

பிரபல தாதா முக்தார் அன்சாரி சிறையில் மாரடைப்பால் மரணம்

Mukhtar Ansari: 2023ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச காவல்துறை வெளியிட்ட 66 குண்டர்கள் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. முக்தார் அன்சாரி போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்பு அச்சம் தெரிவித்திருந்தனர்.

Jailed gangster-politician Mukhtar Ansari critical after heart attack: Sources sgb
Author
First Published Mar 28, 2024, 10:36 PM IST

உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வயிற்று வலி காரணமாக புதன்கிழமை காலை பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார்.

அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவக் கல்லூரியின் ஐசியூ பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

60 வயதான அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்து வந்தது. மார்ச் 23 அன்று கூட, முக்தார் அன்சாரி வயிற்று வலியால் 14 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுனில் கௌஷால் கூறுகையில், "வயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்சனை காரணமாக அன்சாரி அதிகாலை 3.45 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

Chennai Traffic Changes: சென்னை மெட்ரோ கட்டுமானப் பணி காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்!

Jailed gangster-politician Mukhtar Ansari critical after heart attack: Sources sgb

முன்னாள் எம்.எல்.ஏ.வான முக்தார் அன்சாரி மௌ சதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர். கடைசியாக 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.

2005ஆம் ஆண்டு முதல் உ.பி. மற்றும் பஞ்சாபில் சிறையில் இருந்தார். அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால் செப்டம்பர் 2022 முதல் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டு பண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

2023ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச காவல்துறை வெளியிட்ட 66 குண்டர்கள் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. முக்தார் அன்சாரி போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்பு அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம், சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் போலி துப்பாக்கி உரிம வழக்கில் மார்ச் 13ஆம் தேதி அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் பல்வேறு தண்டனை விதிகளின் கீழ் அன்சாரிக்கு மொத்தம் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தது.

ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்... லாட்டரியில் லக் அடித்ததால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

Follow Us:
Download App:
  • android
  • ios