jail dance

ஹரியானா மாநிலம் சண்டிகர் அருகே ஜெயிலில் நடைபெற்ற விழா ஒன்றில் வார்டன் உட்பட போலீசார் அனைவரும் ஜாலியாக போட்ட குத்தாட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.


அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஜிந்த் சிறையில் , கைதிகளுக்கான விழா ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது வெளியிலிருந்து நடன அழகிகளை அழைத்து வந்து போலீசாரும்அவர்களுடன் சேர்ந்து நடனமாடினர்.ஜெயில் வார்டனும் அவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார்.

இந்த குத்தாட்காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியுள்ளது..

போலீஸ் சீருடையில் நடனமாடும் தலைமை வார்டன், நடன அழகிகள் மீது ரூபாய்நோட்டுகளை வீசியது உள்ளிட்ட வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில சிறைத்துறை ஐ.ஜிஉத்தரவிட்டார். விசாரணையின் முடிவில், தலைமை ஜெயில் வார்டன் சத்வான் சிங்-ஐசஸ்பெண்ட் செய்து ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.