சசிதரூரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முயன்றவர்... கரன் தாப்பருக்கு ஜெய் ஆனந்த் பதில்
பாலியல் வேட்டையாடும் ஒருவரைப் பாதுகாத்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்குப் பதிலாக, பொய் சொல்லி அவரைப் பாதுகாத்தவர் கரன் தாப்பர் என்று ஜெய் ஆனந்த் கூறியிருக்கிறார்.
மூத்த ஊடகவியலாளரான கரன் தாப்பர் காங்கிரஸ் தலைவர் சசி தரூரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து பாதுகாத்ததாக ஜெய் ஆனந்த் தனது குற்றம்சாட்டியுள்ளார். 2022ஆம் ஆண்டு ட்விட்டரில் கரன் தாப்பர் தனுக்கு அனுப்பிய மெசேஜ் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஜெய் ஆனந்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள கரன் தாபர், ஜெய் ஆனந்த் நடந்ததை முற்றிலும் தவறாகச் சித்தரிக்கிறார் என்று நிராகரித்துள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட்ட போது அவரை இழிவுபடுத்தும் முயற்சியாகவே அவர் மீது பழி சுமத்தினார் என்றும் கூறியுள்ளார்.
"நான் சசி தரூரைப் பாதுகாத்தேன் என்று கூறுவது முட்டாள்தனமானது. அவருக்கு நான் அளிக்கும் பாதுகாப்பு தேவையில்லை. மேலும், அவர் மீது எந்த வகையிலும் குற்றம் இருப்பதாக நான் நம்பவில்லை" என்றும் கரன் தாப்பர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்காக செய்த பாதுகாப்பு ஏற்பாடு... சாலையின் குறுக்கே கட்டிய கயிறால் இளைஞர் பரிதாப பலி!
ஜெய் ஆனந்த் ஒரு கெளரவமான மனிதராக இருந்தால், நான் அவருக்கு அனுப்பிய முழு மெசேஜையும், அதற்கு முன் அவர் அனுப்பிய மெசேஜ்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கரன் தாப்பர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இதை பொதுவில் வெளியிட ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஜெய் ஆனந்த், "கரண் தாப்பர் இன்று வெளியிட்ட அறிக்கைப் பார்த்து திகைப்பாக இருக்கிறது. பாலியல் வேட்டையாடும் ஒருவரைப் பாதுகாத்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்குப் பதிலாக, பொய் சொல்லி அவரைப் பாதுகாத்தவர் இவர்.
"காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கும்படி பல தொலைபேசி அழைப்புகள் மூலம் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனால் எரிச்சலடைந்த நான் அவரது அழைப்புகளைத் தவிர்த்தேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அறிக்கையில் கௌரவமாக நடந்துகொள்வது பற்றிப் பேசும் கரண் தாப்பர், மரியாதைக்கு வெகு தொலைவில் இருக்கிறார் என்றும் நேர்மையற்றவர் என்றும் ஜெய் ஆனந்த் சாடியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18000 - ஆனந்த் சீனிவாசன் விளக்கம்