It is unfair that Modi hug compate to Titanic - the BJP condemned ...
மோடியின் கட்டிபிடி வரவேற்பை டைட்டானிக் படத்தோடு ஒப்பிட்டு கேலி செய்தது காங்கிரசின் அருவருக்கத்தக்க செயல் என்று பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும், வெளிநாட்டு பிரதமர்கள், அதிகாரிகள் இந்தியாவுக்கு வரும்போதும் பிரதமர் மோடி கைகுலுக்கி, கட்டிபிடித்து அவர்கள் மீது அன்பை பொழிவார்.
சில சமயங்களில் இது அன்பாக தெரிந்தாலும், பல சமயங்களில் மோடி வரவேற்கும் விதம் கிணடல், கேலிக்கு ஆளாகி மீம்ஸ் கிரியேட்டர்கள், நெட்டிசன்களுக்கு தீனி போடுகிறது. இது, பார்வையாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் காமெடியாகிறது.
உடனே, மோடியை கிண்டலடித்து விட்டனர் என்று பாஜகவினர் மேலும், கீழும் குதித்துக் கொண்டிருப்பர்.
அந்த வகையில், காங்கிரசு கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் மோடியின் கட்டிப்பிடித்து வரவேற்கும் முறையை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இதுவும் வழக்கம்போல மக்களுக்கு சிரிப்பை உண்டாக்கும் விதமாகவும், பாஜகவினரின் கண்டனத்தை பெறும் வகையிலும் அமைந்துள்ளது.
அந்த வீடியோவில், மற்ற நாட்டு பிரதமர்களை கட்டிப்பிடித்து அன்பை பொழியும் மோடியை டைட்டானிக் படத்தில் கப்பலில் ஜாக் மற்றும் ரோஸ் கட்டிப்பிடித்து செல்லும் காட்சியோடு ஒப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பாஜகவினரின் முகநூல், டிவிட்டர் பக்கங்களின் கதவையும் தட்டியுள்ளது.உடனே, காங்கிரசின் இந்தச் செயலுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், "காங்கிரசின் இந்த அருவருக்கதக்க செயல் அதன் பக்குவமின்மையை காட்டுகிறது. விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் வேளையில் மோடியின் கட்டிப்பிடி வரவேற்பை அருவருக்கதக்க வகையில் விமர்சித்துள்ளது காங்கிரசின் நிலைத் தன்மை வலுவிழந்து உள்ளது என்பதை காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளனர்.
