it raid today: களையெடுப்பு ஆரம்பம்! அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை ரெய்டு
தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாடுமுழுவதும் வருமானவரித் துறையினர் இன்று ரெய்டு நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாடுமுழுவதும் வருமானவரித் துறையினர் இன்று ரெய்டு நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த ரெய்டு குஜராத்,டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் நடந்து வருகிறது.
அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்களின் வருமான மூலம் என்ன, யார் இயக்குவது, பண உதவி யார் செய்கிறார்கள், வரி ஏய்ப்பு ஆகியவை குறித்து வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் 20ம்தேதி அங்கீகரிக்கப்படாத 111அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது. சமீபத்தில் 87 கட்சிகளின் பதிவையும் ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் இந்த புற்றீசல் அரசியல் கட்சிகளுக்கு நிதி மூலம் எங்கிருக்கிறது, இதுவரை தேர்தல் ஆணையத்திடம் வருமான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை
. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையம் வருமானவரித்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தால் அந்தக் கட்சிகளுக்கென்று அலுவலகமே இல்லை என தேர்தல் ஆணையத்துக்கு தெரியவந்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில்தான் வருமானவரித்துறையினர் இன்று நாடுமுழுதும் தீவிரமாக ரெய்டு நடத்தி வருகிறார்கள். இதுவரை தேர்தல் ஆணையம் பதிவு செய்த அங்கீகாரம் பெறாத 2,100க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மதிக்காமல் இருத்தல், தேர்தல் சட்டங்களை மீறுதல், நிதி மூலம், வருமான கணக்கைத் தாக்கல் செய்யாமல் இருத்தல், கட்சிகளின் முகவரி, அலுவலக பொறுப்பாளர்கள் ஆகியவற்றை புதுப்பிக்காமல் இருத்தல் ஆகிய காரணங்களுக்காக கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதிலும் சில அரசியல் கட்சிகள் தீவிரமான நிதி மோசடிகளிலும், சட்டவிரோதப் பணத்தை அரசியல் கட்சி நடத்தவும் பயன்படுத்துவது தெரியவந்து, அதன் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.