துவண்டுபோன நேரத்தில் தன்னை ஆரத்தழுவி பிரதமர் தன்னை ஆறுதல் படுத்தியதை தருணத்தை வாழ்நாள் முழுவதும் தன்னாள் மறக்கவே முடியாது என இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை நேரில் பார்வையிட நாட்டின் பிரதமர் மோடி பெங்களூருவில்  உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்திருந்தார். சரியான பாதையில் பயணித்து வந்த விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க  சுமார் 2 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த போது அதன்  சிக்னல் துண்டிக்கப்பட்டதால் சந்திராயன் திட்டத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. 

அதுவரை ஏற்கனவே திட்டமிட்டபடி பல லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை விக்ரம் லேண்டர் துள்ளியமாக கடந்து வந்ததை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியாக கண்டு களித்துவந்தனர்.  லேண்டர், நிலவை நெருங்கிய நேரத்தில் அதன்  சிக்னல் துண்டிக்கப்பட்டது, இதனால் விஞ்ஞானிகள் பதற்றமடைந்தனர். விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் எதுவும் கிடைக்காததால் இஸ்ரோ மையத்தில் சோகம் தொற்றிக்கொண்டது. விக்ரம் லேண்டரை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர் ஆனாலும்  லேண்டரில் இருந்து எந்த சமிக்ஞைகளும் வரவில்லை இதானல் விஞ்ஞானிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இத்தனை ஆண்டுகாலம்  கடினமாக உழைத்துசெய்த திட்டம்,  நாடே பெருமையுடன் எதிர் நோக்கி காத்திருக்கிற  திட்டம், கடைசி நேரத்தில் பின்னடைவை சந்தித்துவிட்டதே என எண்ணி விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். 

நிலைமையை உணர்ந்த பிரமர் மோடி,  கலங்கிய விஞ்ஞானிகளை தேற்றும் விதத்தில் இஸ்ரோ மையத்தில் மைய பகுதியில்  விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். பிறகு அங்கிருந்த மாணவர்களையும் ஆறுதல் படுத்தி பேசிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார் மோடி. பின்னர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை ட்ரேக் செய்யும் பணியில் இறங்கினர் ஆனால் பலமணி நேரம் போரடியும் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதனால் சோகத்தின் உச்சிக்கு சென்றது சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு. அதுவரை இஸ்ரோ மையத்திலேயே விடியும்வரை காத்திருந்து மீண்டும் காலை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மோடி,  விஞ்ஞானிகளை ஆறுதல் படுத்தினார். 

அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமரை பார்த்து கலங்கினார். பிரதமர் மோடி சிவனை தன் நெஞ்சில் சாய்த்து கலங்க வேண்டாம் , மற்றோரு சோதனையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி ஆறுதல் படுத்தினார் ஆனால் துக்கம் தாங்காமல் சிவன் கதறினார். பிரதமர் அவரை விடாமல் முதுகில் தட்டி நாடே உங்கள் பின்னால் இருக்கிறது தைரியமாக இருங்கள் என்று தேற்றினார். இந்த காட்சி நாட்டு மக்களையே தேச ஒற்றுமையில் நெகிழ வைத்ததுஅந்த தருணத்தை தனது டுவிட்டர் வலைபக்கத்தில் பதிவு செய்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன். துவண்ட நேரத்தில் தன் நெஞ்சில் சாய்த்து தன்னை ஒரு தாயைப்போல் பிரதமர் தேற்றிய தருணத்தை தன் வாழ்நாள் இறுதிவரை மறக்கவே முடியாது என்று நெகிழ்ந்துள்ளார்.