விண்கலத்தில் இருந்து சந்திரயான்-3 லேண்டர் இன்று பிரிகிறது; நிகழவிருக்கும் அற்புதம்!!
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியுள்ள நிலையில் அதன் லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு 4,400 கி.மீ. தொலைவில் இருந்து எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நிலவின் மேற்பரப்பைக் காட்டும் ஒரு படத்தையும் ஒரு வீடியோவையும் சந்திரயான்-3 விண்கலம் எடுத்துள்ளது. இத்துடன் பூமியின் தோற்றத்தையும் படம்பிடித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் எடுத்த இந்த மூன்று படங்களை வெளியிட்ட இஸ்ரோ தற்போது புதிய படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய படத்தில் நிலவின் மேற்பரப்பை மேலும் நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. சந்திரயான்-3 இல் உள்ள லேண்டரில் உள்ள LHVC (Lander Horizontal Velocity Camera) என்ற நவீன கேமரா மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு மிக அருகில் சந்திரயான்-3! லேண்டரை தனியாகப் பிரிக்கத் தயாராகும் இஸ்ரோ!
ஏற்கெனவே இஸ்ரோ வெளியிட்ட பூமியின் படம் விண்கலம் ஏவபட்ட ஜூன் 14ஆம் தேதி விக்ரம் லேண்டரின் இமேஜர் கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது. நிலநிறத்தில் இருக்கும் பூமியின் தோற்றம் அந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது.
சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைவதற்கு முன் லேண்டரில் உள்ள எல்.ஹெச்.வி.சி (LHVC) என்ற கேமரா மூலம் நிலவின் தோற்றம் படம்பிடிக்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோ ஆகஸ்ட் 6ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்டது.
சந்திரயான்-3 விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவு நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறை இன்று (புதன்கிழமை) காலை சுமார் 8.30 மணி அளவில் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சந்திரனுக்கு மேலும் நெருக்கமாக முன்னேறி இருக்கிறது.
இனி விண்கலத்தின் உந்துவிசை தொகுதி மற்றும் தரையிறங்கும் லேண்டர் தொகுதி ஆகியவை நாளை (ஆகஸ்ட் 17) பிரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்கும் தொகுதி பிரிந்த பின் அதில் உள்ள சிறிய ராக்கெட்கள், எஞ்சின்கள், சென்சார்கள் உள்ளிட்டவை சரியாக இயங்குகின்றனவா என்று சோதனை செய்யப்படும். சோதனைக்குப் பின் ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வகர்மா திட்டத்தில் ஒரு லட்சம் கடன்! அதிகபட்ச வட்டியே 5% தான்! மத்திய அரசு அறிவிப்பு