நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது. இதையடுத்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்து ஞாயிறு அன்று ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவில் விக்ரம் லேண்டர் இருப்பிடம் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்கள் மூலமாக துல்லியமாக கண்டறியப்பட்டது. எனினும் அதனுடன் தொடர்பு கிடைக்கவில்லை.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பதாக ஆர்பிட்டரில் இருக்கும் கேமரா மூலம் கண்டறிந்துளாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

விக்ரம் லேண்டர் இருப்பிடம் தெரிந்தபோதும் தற்போதுவரை அதனுடன் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளது.