Asianet News TamilAsianet News Tamil

சதம் அடிக்கும் இஸ்ரோ ! இன்றும் சற்று நேரத்தில்  விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி 40 ராக்கெட்…

Isro 100 rockrts PSLVC 40
Isro 100 rockrts PSLVC 40
Author
First Published Jan 12, 2018, 8:27 AM IST


இந்தியாவின் 100வது செயற்கைக்கோளான கார்டோசாட் 2 சீரிஸ் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது.

 இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து வர்த்தக ரீதியிலான ராக்கெட்டுக்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கார்டோசாட் 2 சீரிஸ் ரக செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்த பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என்று மொத்தம் 31 செயற்கைக்கோள்க்ளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

செயற்கைக்கோள் வரிசையில் கார்டோசாட் 2, 7வது செயற்கைக்கோள். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை படமெடுத்து அனுப்பும் வகையில் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள், ஏவப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண் குமார், பி.எஸ்.எல்.வி. சி40 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று காலை 5.29 மணிக்கு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios