Asianet News TamilAsianet News Tamil

எகிப்தை ஏடாகூடமான இடத்தில் தாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்

எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் நகர் பகுதியில் துப்பாகிச்சூடு தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

Islamic State jihadists claims deadly attack in Egypt Suez Canal city
Author
First Published Jan 1, 2023, 11:28 AM IST

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் பகுதி சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் பாதையாக உள்ளது. ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் இப்பாதை வழியாக அதிக அளவு வர்த்தகம் மேற்கொள்கின்றன.

உலக கடல்வழி வர்த்தகத்தில் 10 சதவீதம் இந்தக் கால்வாய் வழியே நடக்கிறது. இப்பகுதியைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமையன்று எகிப்தின் சூயஸ் கால்வாய் அருகே உள்ள இஸ்லாமிய நகரில் அந்நாட்டு காவல்துறையினரைக் குறிவைத்து கடும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த கும்பல்: பீட்சா டப்பாவை வைத்துப் பிடித்த போலீஸ்!

இதில் மூன்று எகிப்து போலீசார் கொல்லப்பட்டனர் என்றும் கூறியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.

சினாய் தீபகற்பப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதச் செயல்களைத் தடுக்க எகிப்து ராணுவம் சென்ற மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இருப்பினும் கடந்த மே 7ஆம் தேதி மேற்கு சினாய் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு சில நாட்கள் முன்பு எகிப்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஐந்து வீரர்களையும் அந்நாட்டு ராணுவம் இழந்தது.

ஆப்கன் பூகம்பம் முதல் அழகிப் போட்டி வரை... 2022ல் உலகை உலுக்கிய டாப் 20 நிகழ்வுகள்

Follow Us:
Download App:
  • android
  • ios