கன்னையா லால் பாணியில் ராஜஸ்தானின் உதய்பூரில் அடுத்த தாக்குதல்!

ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் பாணியில் அடுத்த தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

IsIamist mob attacked a Hindu man in Rajasthan Udaipur tension over another Kanhaiya Lal style assault smp

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரெஹான் மற்றும் மூசா தலைமையிலான இஸ்லாமிய கும்பல் ஒன்று இந்து மதத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அதிர்ஷ்டவசமாக சுரேஷ் காப்பாற்றப்பட்டார். அத்துடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அம்மாநிலத்தில் நிலைமை பதற்றமாகவே உள்ளது.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

 

 

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லாலை அவர்கள் படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

ஆந்திராவில் ரூ.176 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், மோதல்கள் நடைபெற்றன. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அப்போதே சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதய்பூர் தையல்காரர் கொலையாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்புள்ளதாக அப்போதைய ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் பாணியில் அடுத்த தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios