மும்பை: ஸ்ரீதேவிக்கு இதுவரை மாரடைப்பு வந்ததில்லை என்று உறவினர் சஞ்சய் கபூர் தெரிவித்தார். மேலும் அவர் இறப்புக்கான காரணம் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளே காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

80-களில் மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு இன்று வரை ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையினால் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவார்.

5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் உறவினர் மோஹித் மார்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக கணவர் போனி கபூர் மற்று்ம மகள் குஷியுடன் சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள நிலையில், அவருக்கு நேற்று உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. உடல் நேற்று இரவே மும்பை வருவதாக இருந்தது. ஆனால் உடற்கூறு ஆய்வில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று அவரது உடல் வருகிறது.

 உடற்பயிற்சி, ஜிம் என்று எப்போதும் தனது உடலை பிட்டாக வைத்து கொள்வதில் ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

அவர் பொரித்த உணவுகளை சாப்பிட்டு 30 ஆண்டுகள் ஆகிறதாம். இந்நிலையில் அவருக்கு இதற்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதில்லை என்று அவரது கொழுந்தனார் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். அவர் முகத்தில் சுருக்கங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவும் தன் அழகை மெருகூட்டவும் 6 முறை பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துள்ளார்.

அவர் எப்போது இளமையாகவே இருக்கவும் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக அவரை 40 வயதுக்கும் குறைந்த வயதுடைய பெண்ணாக இருப்பதற்காகபல மருந்து மருந்துகளை உட்கொண்டதாகவும் இவையே அவரது உயிரை குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல, ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் இது தான் என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு போஸ்ட் வைரலாகியுள்ளது. அந்த போஸ்டில் கூறியிருப்பதாவது,

“ஸ்ரீதேவி திடீர் என்று இறந்துவிட்டாரே என்று வருத்தப்படும் நாம் அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் ஒல்லியாக, 40 வயதை விட இளமையாக தெரிய வேண்டும் என்று சமூகம் விரும்பியதால் தொடர்ந்து சர்ஜரிகள் செய்து கொண்டார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை சந்தித்தபோது அவர் அழகாக இருந்தார். ஆனால், சாந்தினி படத்தில் பார்த்தது போன்று இல்லாமல் கவலையுடன் காணப்பட்டார். வெயிட்டை குறைக்க வேண்டும், முகத்தில் சுருக்கம் இருக்கக் கூடாது என்கிற பிரஷரால் அவர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்தார். 

ஸ்ரீதேவியை அதிகம் விரும்பியதாக கூறிய அவரது கணவராவது தலையிட்டு அவரை தடுத்திருக்க வேண்டும். அழகு மட்டும் தான் அவருக்கு முக்கியமா? ஸ்ரீதேவியே அவரின் அழகு விஷயத்தில் அவரை நம்பவில்லை. 

ஸ்ரீதேவிக்கு அவர் மீதே அக்கறை இல்லை. தனது உதடுகள் சரியில்லை, முகம் சரியில்லை என்று நினைத்து அழகான உடைகள் அணிய உடம்பை குறைத்துள்ளார் என்று பியாலி கங்குலி தெரிவித்துள்ளார்.

வலைதளங்களில் உலாவும் இந்த பதிவால் பாலிவுட் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சிலர் இது உண்மையான விஷயம் என கூறுகின்றனர்.