ராகுல் காந்தி எம்பி பதவியை இழக்கிறாரா? மேல்முறையீடு செல்ல முடியுமா?
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது எம்பி பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது அப்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இன்று இந்த வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் நேரில் ராகுல் காந்தி ஆஜராகி இருந்தார். நீதிமன்ற தீர்ப்பில், 10,000 ரூபாய் பிணைப் பத்திரத்தின் மீது ஜாமீன் வழங்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 499, 500-ன்படி குற்றத்திற்கு உள்ளாகிறார் என்று தலைமை நீதிபதி ஹெச் ஹெச் வர்மா தெரிவித்து இருந்தார்.
1956ஆம் ஆண்டின் மக்களவை பிரதிநிதித்துவ சட்டம் 8(3) கீழ் பார்த்தால், இந்த குற்றச்சாட்டிற்காக ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழக்க நேரிடும். எப்போது என்றால் உயர்நீதிமன்றத்தால் இந்த தீர்ப்பை ரத்து செய்யாதபட்சத்தில் எம்பி பதவியை இழப்பார். ஆனால், அதற்கான சூழல் தற்போது எழவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, வேறு எந்த எம்பியாக இருந்தாலும் மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், இங்கு முப்பது நாட்களுக்கு மட்டுமே ரத்து செய்து இருப்பதால், ராகுல் காந்தி முப்பது நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
வழக்கு தொடுத்தவர்:
பாரதிய ஜனதா எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தனது புகாரில், 2019 ஆம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் கோலாரில் ராகுல் காந்தி உரையாற்றியபோது, ''எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பொதுவான குடும்பப் பெயர் எப்படி வந்தது?'' என்று கூறி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்து இருந்தார் என்று குற்றம் சாட்டினார்.
பூபேந்திர படேல் அரசின் முதல் ஆட்சியில் பூர்ணேஷ் மோடி அமைச்சராக இருந்தார். டிசம்பர் தேர்தலில் சூரத் மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராகுல் காந்தி நேரில் ஆஜராகக் கோரி புகார்தாரர் அளித்த மனு மீதான தடையை குஜராத் உயர்நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, கடந்த மாதம் இந்த வழக்கில் இறுதி வாதங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சு.. ராகுலுக்கு 2 ஆண்டு சிறை - முழு பின்னணி இதுதான்