is adhar number going to linked with swiss bank account ? raised harthick patel
சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறதா ஆதார் எண்..? கிளம்பியது புது சர்ச்சை..!
வங்கி கணக்கு முதல் கொண்டு, ரேஷன் கார்டு பாண் எண் மொபைல் உள்ளிஓட அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது
இந்நிலையில்,ஆதார் எண் இணைப்பு மூலம் தனை மனித ரகசியத்திற்கு ஆபத்து என மக்கள் கருது தெரிவித்க்ஹு இருந்தனர். பின்னர இதற்கு ஆதார் எண் இணைப்பிற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதன் எதிரொலியாக, ஆதார் எண்ணை சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று சொல்லப்போகிறதா மத்திய அரசு? என்று குஜராத் மாநில படேல் சமூக இட ஒதுக்கீட்டுப் போராளி ஹர்திக் படேல் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்
குஜராத் சட்டபேரவை தேர்தல்
வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக, குஜராத் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என காங்கிரசும் போட்டி போட்டுகொண்டு பெரும் விமர்சனம் செய்து வருகின்றன
இச்சூழலில், அம்மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி பெரும் வரவேற்பைப் பெற்ற இளைஞர் ஹர்திக் படேலின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது
இதற்கு முன்னதாக காங்கிரசுக்கு தான், தன்னுடைய ஆதரவு என ஏற்கனவே ஹர்திக் படேல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான் ஆதார் எண்ணை சுவிஸ் வங்கி கணக்குடன் இணைக்குமா மத்திய அரசு என கேள்வி எழுப்பி உள்ளார்.
பிஜேபி ஆளும் தன்னுடைய மாநிலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்றுள்ள ஹர்திக் படேல் பிஜேபி-க்கு எதிராக பல எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
