IRCTC to Enable Buy Now Pay Later Feature in Partnership With ePaylater

ரெயில் டிக்கெட் முன்பதிவின்போது இனிமேல் உடனடியாக பணம் கொடுக்காமல்,டிக்கெட்டை பெற்றுக்கொண்டு 14 நாட்களுக்கு பின் பணம் செலுத்தும் திட்டத்தைரெயில்வே துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து இந்திய ரெயில்வே உணவுப்பிரிவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சந்தீப் குப்தா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-

ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மும்பையைச் சேர்ந்த ‘இ-பே-லேட்டர்’ என்ற தனியார்வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து புதிய வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன்படி, பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட்முன்பதிவு செய்யும் போது, உடனுக்குடன் பணம் செலுத்த தேவையில்லை.டிக்கெட்டை பெற்றுக்கொண்டு, 14 நாட்களுக்கு பின் பணத்தை செலுத்தினால் போதுமானது.

முதல் முறையாக இந்த வசதியைப் பெறுபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் அவர்களின் பெயர், மின்அஞ்சல் முகவரி, ஆதார் எண், பான்கார்டு எண், உள்ளிட்ட பல விவரங்களை அளிக்க வேண்டும், அதன்பின் அவர்களுக்கு ஒரு பாஸ்வேர்டுஅளிக்கப்படும். அதன்பின், அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் வரவு செலவு கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த வசதி அளிக்கப்படும்.

அதாவது, கிரெடிட் கார்டு வாங்கும்போது ஒரு வங்கி என்னமாதிரியான தகுதிகளை ஒரு வாடிக்கையாளருக்கு வைத்து இருக்குமே அந்த தகுதியின் அடிப்படையில் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் பயணி ஒருவர் குறைந்தபட்சம் தனது பயணத்துக்கு 5 நாட்களுக்குமுன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்கு 3.5 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும். பணத்தை 14 நாட்களுக்கு பின் செலுத்தலாம். இந்த வசதி அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில், அதி விரைவு ரெயில்கள் உள்ளிட்டவற்றுக்கு பொருந்தும்.

ஒருவேளை 14 நாட்களுக்கு பின் அந்த குறிப்பிட்ட பயணி டிக்கெட்டுக்கு உரிய பணத்தை செலுத்தினால், அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை பணத்தை செலுத்த தவறினால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வசதி முதலில் குறிப்பிட்ட பயணிகள் அதாவது பயணிகளின் வங்கி வரவுசெலவு, பரிமாற்றம், கடன் செலுத்தும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.