மோசடிகள் அதிகரித்ததால், குறிப்பிட்ட இந்த நாடு இந்தியர்களுக்கான விசா-ஃப்ரீ வசதியை நிறுத்தியுள்ளது, இனி சுற்றுலா மற்றும் transit உட்பட அனைத்து பயணங்களுக்கும் விசா கட்டாயம்.

MEA வெளியிட்ட தகவல்கள் தற்போது மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களாக மாறியுள்ளது. பல இந்தியர்கள் “வெளிநாட்டில் வேலை”, “மூன்றாவது நாட்டுக்கான டிரான்சிட்” போன்ற பெயர்களால் ஏமாற்றப்பட்டு ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கே சென்ற பிறகு, சிலரை குற்றவியல் குழுக்கள் கடத்தி, பணம் கேட்டு குடும்பத்தினரிடம் மிரட்டல் விடுத்ததாக பல புகார்கள் வந்துள்ளன. விசா-ஃப்ரீ வசதி இருப்பதால் இந்த மோசடிகள் வேகமாக அதிகரித்ததால், ஈரான் அரசு இந்த சலுகையை நிறுத்தத் தீர்மானித்துள்ளது.

விசா கட்டாயம்

நீங்கள் சுற்றுலா பயணம், தொழில் பயணம் அல்லது transit பயணமாக ஈரான் விமான நிலையம் வழியாக சென்றாலுமே விசா அவசியம். “விசா இல்லாமலே transit” என்ற நடைமுறையும் இனி கிடையாது. இது airlines-க்கும் பொருந்துகிறது. எந்தப் பயணிக்கும் செல்லுபடியாகும் ஈரான் விசா இல்லாவிட்டால், விமான நிறுவனங்கள் ஏறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய எச்சரிக்கை

MEA தனது ஆலோசனையில், குறிப்பாக வேலைவாய்ப்பு பெயரில் அழைக்கும் முகவர்களை நம்புங்கள் வேண்டாம் என்று கூறியுள்ளது. பல மோசடி குழுக்கள் “ஐரோப்பாக்கு வேலை”, “வளைகுடாவிற்கு வேலை வாய்ப்பு” என்று கூறிவிட்டு, திருப்பி ஈரானில் இறக்கி கடத்தல் செய்கின்றனர். அதனால், யாரிடமும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் வந்தால், அது உண்மையானது என்பதை இந்திய தூதரகம் அல்லது MEA portel மூலம் சரிபார்த்து மாட்டிக்கொள்ள வேண்டாம் என்பதே எச்சரிக்கை ஆகும்.

ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்கள்

2025 நவம்பர் 22 அல்லது அதற்குப் பிறகு பயணம் இருந்தால், உடனே உங்கள் பயண முகவர்-ஐ தொடர்புகொண்டு விசா பற்றிச் சொல்லுங்கள் சொல்ல வேண்டும். விசா இல்லாமல் விமான நிலையத்தில் boarding மறுக்கப்படும். Transit மட்டுமே என்றாலும் விசா அவசியம் என்பதால், பயண திட்டத்தை முன்கூட்டியே clear பண்ணிக்கொள்ள வேண்டும். ஈரான் விசா-ஃப்ரீ நிறுத்தம் இந்தியர்களுக்கான ஒரு பெரிய மாற்றம். ஆனால், இது பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கை என்பதால், பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை, போக்குவரத்து அல்லது சுற்றுலா எந்த வகையிலும் ஈரான் செல்ல முடியும், முன்கூட்டியே விசா பெற்றாலே பாதுகாப்பான பயணம் சாத்தியம் ஆகும்.