டில்லி,

திமுக சட்ட விதிகளின்படி தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவி கிடையாது எனபதால் சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானது செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவிக்குப் பின் பல பிரளயங்களுக்குப் பிறகு, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா அவசர அவசரமாக பதவியேற்றார்.

கடந்த வருடம் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியும் ஏற்றார்.

அதற்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம் அதிமுகவின் தலைமை என்பது ஜெயலலிதாவிற்கு மட்டுமே என்பதில் மக்கள் விடாபிடியாக இருந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டமன்று குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்ததை தொடர்ந்து மக்களின் வலுவான எதிர்ப்பை சசிகலா சந்திக்க நேர்ந்தது.

இருந்தும், முதல்வர் பதவியை ஏற்க சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்ய்பட்டு, இன்று வரை காவலாளர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றைய ஒபிஎஸ்ஸின் பேட்டியில், சசிகலா வெறும் தற்காலிக பொதுச் செயலாளர்தான் என்றும் தெரிவித்தார்.

சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்து அறிக்கையை கேட்டது தேர்தல் ஆணையம்.

இதுகுறித்து, இன்று தேர்தல் ஆணையம் கூறியதாவது:

“அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்று அதிமுக சட்ட விதிகளில் கிடையாது. அதிமுகவின் விதிப்படி பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வெண்டும். இந்திய அரசியல் கட்சியில் அதிமுகவில் மட்டும் தான் இந்த விதி உள்ளது. அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே பொது செயலாளரை நியமிக்க முடியும். மேலும், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. ஆகவே சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது. என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.