ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வரவேற்பு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு உரிமை கிடைத்திருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடம், இதற்கு முன்பு கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி, ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வின் முடிவுகள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி, ஞானவாபி மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக தென்பட்ட ஆதரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் , ஞானவாபி மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு உரிமை கிடைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
இதுகுறித்து அவர் கூறுகையில், “அடித்தள கோயிலில் வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை காசி விசுவநாதர் கோயில் அறக்கட்டளை நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. கோயிலில் வழக்கமான பூஜை அர்ச்சனை மற்றும் பிற சடங்குகள் நடைபெறவுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு முந்தைய நிலையை மீட்டெடுத்து, அந்த இடத்தில் இறைவனை வழிபடும் உரிமையை நமக்குத் திருப்பித் தந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கினை விரைவாக முடிப்பதற்கு இந்த தீர்ப்பு முன்னோடியாக இருக்கும் என நம்புவதாக, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு அண்ணி எதிர்ப்பு: சிக்கலில் ஹேமந்த் சோரன்!
மேலும், “கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில், முக்கிய வழக்கின் இறுதித் தீர்ப்பும் நமக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். மனிதகுலத்தின் நன்மைக்காகவும் நலனுக்காகவும் ஆதி விஸ்வேஸ்வரர் கோயிலுக்கான ஞானவாபி இடத்தை இந்துக்கள் திரும்பப் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஞானவாபி பீடத்தின் தெற்குப் பகுதியில் உள்ள அடித்தளத்தில் ஒரு கோயில் உள்ளது. அந்த கோயிலில் தெய்வங்களுக்கு வழக்கமான பூஜைகள், அர்ச்சனைகள் கடந்த 1993 ஆம் ஆண்டு வரை நடந்து வந்தது. ஆனால், 1993 ஆம் ஆண்டில், நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால், இந்துக்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகளும் நிறுத்தப்பட்டன.” எனவும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.