பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் அமைந்துள்ள பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் 8ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டதுடன், மின்னுற்பத்தி ஆலை உள்ளிட்ட சில திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் பெட்ரோலியம் பொறியாளருமான சுல்தான் அலிமுதீன், நரேந்திர மோடியுடனான உறவு மற்றும் உரையாடல் குறித்து டுவீட்கள் செய்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட சுல்தான் அலிமுதீன், இன்று பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின்(PDPU) பட்டமளிப்பு விழா. பிரதமர் மோடி தான் சிறப்பு விருந்தினர். PDPUவின் முன்னாள் மாணவர் என்ற முறையில், குஜராத்தில் நான் தங்கியிருந்த காலங்கள் மற்றும் மோடி சாருடனான எனது சந்திப்புகள், அவருக்கு புனித குர் ஆன் நூலை வழங்கியது என எனது நினைவுகளையும், மோடி சாருடனான எனது கதையையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

 

நரேந்திர மோடி சாருடனான எனது முதல் சந்திப்பு எப்போதென்றால், அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அவரது ஆட்சி குறித்து அவருக்கு ஒரு டுவீட் அனுப்பினேன். உடனே, விரிவான ஒரு சந்திப்புக்காக எனக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. பிரதமர் மோடியுடனான எனது ஆறு சந்திப்புகளில் அதுதான் முதல் சந்திப்பு.

நான் 2008ம் ஆண்டு PDPUவில் படிப்பதற்காக குஜராத்திற்கு வந்தேன். அப்போது, குஜராத் மீது எனக்கு நன்மதிப்பே கிடையாது. குஜராத் என்றாலே மதக்கலவரம் அல்லது நிலநடுக்கம் தான் நினைவுவரும். என்னுடைய நண்பர்கள் குஜராத் வேண்டாமென்று எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் மோடி சாருடனான எனது சந்திப்பு மற்றும் உரையாடல்களுக்கு பிறகு, குஜராத்தின் மீதான பார்வையும், மனநிலையும் மாறியது.

மோடி சாருடனான ஒரு சந்திப்பின்போது, அவர் என்னிடம் சொன்னதை நான் என்றுமே மறக்கமாட்டேன். மோடி சார் என்னிடம் சொன்னது... “நான் முஸ்லீம்களுக்கு எதுவுமே செய்ததில்லை. ஆனால், அதேவேளையில், நான் இந்துக்களுக்கோ, சீக்கியர்களுக்கோ மற்ற மதத்தினருக்கோ கூட எதுவுமே செய்ததில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் 55 மில்லியன்(5.5 கோடி) குஜராத்தியர்களுக்கானவன். நான் செய்யும் அனைத்தும் ஒட்டுமொத்த குஜராத்தியர்களின் நலனுக்கானது. மோடி சாருடனான சந்திப்புகளில் ஒரு நிமிடம் கூட நான் அசவுகரியமாக உணரவில்லை. 

மோடி சாருடனான எனது அடுத்தடுத்த சந்திப்புகளின்போது, இந்தியாவை எண்ணெய் மற்றும் கேஸ் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு நாடாக இருக்க வேண்டும் என்ற அவரது கனவுதான் தற்போது நம்மை எனர்ஜி சூப்பர்பவர் நாடாக மாற்றியுள்ளது. இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவருக்காகவும் மனதார உழைப்பவர் மோடி சார். எப்போதுமே விட்டுக்கொடுக்காதீர்கள் என்பார். தவறுகளுக்கெதிராக போரிட தயங்கக்கூடாது என்பார் மோடி சார். 

நான் இன்று எனது கெரியரில் வேகமாக வளர்ந்துவருகிறேன். நான் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். இப்போது இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை மாறியிருக்கிறது. நான் அவருடனான சந்திப்புகளை நினைத்து பெருமைப்படுகிறேன். மோடி சாரை எது ஸ்பெஷலாக்கியது என்பது தான் எழுதிய புத்தகத்தையும் பகிர்ந்துள்ளார் சுல்தான் அலிமுதீன்.