அண்மையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, நடிப்புக்கு அடுத்தபடியாக விரும்பிச் செய்வது ஓவியம் வரைவதுதானாம். அவர் வரைந்த ஓவியம் ஒன்று துபாயில் நடைபெற இருக்கும் ஏலத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி உள்ளிட்ட சினிமா துறையில் இருந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதைக் கவர்ந்து பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர், கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவர், துபாயில் நடைபெற்ற திருமண விழா ஒன்றுக்காக, சென்றபோது அங்கு மரணமடைந்தார். 

துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலர் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர், ஸ்ரீதேவியின் உடல், மும்பையில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரு குழந்தைகளுக்குத் தாயும், எனது நண்பனையும் இழந்து விட்டேன். அதனை விவரிக்க வார்த்தகள் இல்லை. இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர். நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இந்த உலகுக்கு அவர் நடிகையாகவும், தேவதையாகவும் இருந்தார். ஆனால், எனக்கு அவர் காதலாகவும், நண்பராகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். அவர்களுக்கு எல்லாமாகவும் அவரே இருந்தார். ஸ்ரீதேவி எங்களின் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும், எங்கள் புன்னகைக்கு காரணமாகவும் இருக்கிறார். என் அன்பே... அமைதியான ஓய்வில் இரு. நம் வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரி அமையாது என்று போனி
கபூர் உருக்கத்துடன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவு ஸ்ரீதேவி ரசிகர்களால் வெகுவாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி, ஓவியம் வரைவதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளாராம். அது மட்டுமல்ல, அவர் வரைந்த ஓவியம் துபாயில் நடைபெற இருக்கும் ஏலத்தில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவி வரைந்த இந்த ஓவியத்தை, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக அந்த ஓவியத்தை கொடுத்துள்ளாராம். ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலை போகலாம் என்றும்
கூறப்படுகிறது. நடிகை சோனம் கபூர் நடித்த முதல் படமான சாவரியா படத்தை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி இந்த ஓவியத்தை வரைந்துள்ளாராம்.

நடிப்புக்கு அடுத்தபடியாக, ஸ்ரீதேவி விரும்பிச் செய்வது ஓவியம் வரைவதாம். அது மட்டுமல்ல, ஏராளமான ஓவியங்களையும் வரைந்துள்ளாராம். கணவர், பிள்ளைகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவிக்கு பிடித்தமானது என்றால் அது ஓவியம் வரைவதுதானாம்.