தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மாநில கோலார் மாவட்டத்தின் மாலுரர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவர் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலுரர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராகவேந்திரா. இவர் நேற்று வழக்கம்போல நேற்று நைட் ஷிப்டுக்காக காவல் நிலையத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காலை வெகுநேரம் ஆகியும் அவர் தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தனது கைதுப்பாகியால் சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கர்நாடகா போலீசார் விசாரணை மேகொண்டு வருகின்றனர். ட்யூட்டியில் இருந்த ஒரு இன்ஸ்பெக்டரே தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளது நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
