பெங்களூரு - சென்னை.. விமான பயணத்தில் வாங்கிய உணவில் பெரிய 'ஸ்க்ரூ' - பயணிக்கு இண்டிகோ அளித்த பதில் என்ன?
Screw in Sandwich : விமான பயணத்தில் பெறப்படும் உணவுகளில் பூச்சிகள் மற்றும் பிற அசுத்தங்கள் இருக்கும் சம்பவங்கள் இப்பொது தொடர்கதையாகி உள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் பெங்களுருவில் இருந்து இண்டிகோ விமான சேவையில் சென்னை பயணித்த ஒரு பயணி வெளியிட்டுள்ள தகவல் திடுக்கிடும் வகையில் உள்ளது. அதாவது அந்த பயணி தனது விமான பயணத்தின்போது வாங்கிய ஒரு உணவுப்பொருளை (Sandwich) உண்பதராக பிரித்தபோது அதனுள்ளே ஒரு இரும்பு Screw இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பயணி தனது சமூக வலைதள கணக்கில் அளித்த தகவலில் "கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இண்டிகோவில் பயணம் செய்தபோது எனது சாண்ட்விச்சில் ஒரு Screw கிடைத்தது." உடனே நாள், இதுகுறித்து இண்டிகோவிடம் பேச அவர்களை தொடர்புகொண்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
6 மாசத்துக்கு உணவு, எரிபொருள் இருக்கு... நீண்ட போராட்டத்துக்குத் தயாராக வந்த விவசாயிகள்!
விமான நிறுவனத்திடம் அவர் பேசியபோது "அந்த பயணி தனது விமான பயணத்திற்கு பிறகு அந்த சாண்ட்விச் உட்கொண்டதால், தங்களால் அதில் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி அவருக்கு பதில் அளித்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் அந்த நபர். இந்த விஷயத்தில் இனி என்ன செய்வது என்பது தெரியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவருடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பலர், அந்த உணவை ஒரு குழந்தை தெரியாமல் சாப்பிட்டால் என்னவாகி இருக்கும் என்ற கோணத்தில் தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அந்த நிறுவனத்தின் தலைவரை டேக் செய்து இதுகுறித்து அவர் புகார் அளிக்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.
உலகின் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கிய இந்தியா: மைக்கேல் ஸ்பென்ஸ் புகழாரம்!