கோவா அமைச்சர் உட்பட 180 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, விமானியின் சாதுர்யத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம்போல நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டது. விமானத்தில் கோவா அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட 180 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே விமானத்தில் இடதுபுற என்ஜினில் தீப்பிடித்தது. இதனை கண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். 

இதுதொடர்பாக உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை தரையிறக்கவும் அனுமதி கோரினார். இதனிடையே, விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. இதனையடுத்து, விமானம் 15 நிமிடங்களில் பத்திரமாக தரையிறங்கிய பின்னரே அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது. எஞ்சினில் தீப்பற்றியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.