Indias Ambanis top Asia family rich list
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் இதழ். இதில், இந்தியாவின் அம்பானி குடும்பம் தான் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்க நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆசியாவின் பணக்காரர்கள் குடும்ப பட்டியலை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, முகேஷ் அம்பானி குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு கடந்த வருடம் 19 பில்லியன் டாலரிலிருந்து 45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் பெருமளவில் முகேஷ் அம்பானிக்கு வந்ததால், தற்காலிகமாக ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இந்த மாதத்தில் இடம்பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் ஜியோ, எண்ணெய் நிறுவனங்களான ரிபைனரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 5.6 டிரில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தை நடத்தி வரும் லீஸ் குடும்பத்தினரை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு, அம்பானி குடும்பம் முதல் இடத்தை பெற்றுள்ளது. தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனத்தை நிர்வாகிக்கும் லீஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 11.2 பில்லியனிலிருந்து 40.8 பில்லியன் டாலராக இவ்வாண்டு அதிகரித்துள்ளது
கடந்த ஆண்டு சாம்சங் எலெக்ட்ரானிக்சின் பங்கு 75 சதவீதமாக உயர்ந்ததுதான் இந்த வளர்ச்சிக்கு காரணம்.
ஆசியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹாங்காங்கைச் சேர்ந்த ஹவோக் குடும்பம் 0.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பு பெற்று, இந்த ஆண்டு பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
தாய்லாந்தின் சரோவனோட் குடும்பத்தின் சொத்து மதிப்பு 36.6 பில்லியன் நிகர மதிப்பு பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. ஆசியாவில் முதல் 10 பணக்காரக் குடும்பங்களில் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் குடும்பம் அம்பானி குடும்பத்தினரே.
