Asianet News TamilAsianet News Tamil

நிலாவில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்..? இப்படியும் ஒரு பித்தலாட்டமா?

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

Indians buy five acres of land Is this even a brawl
Author
India, First Published Jul 30, 2019, 6:07 PM IST

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமில்லை என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

சமீபத்தில் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு உலக நாடுகளும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜிவ் பாக்டி என்பவர் கடந்த 2003-ஆம் ஆண்டு 140 டாலர் கொடுத்து நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.Indians buy five acres of land Is this even a brawl

இதற்காக அமெரிக்காவில் உள்ள நிலவு நிலப்பதிவு அலுவலகத்தில் அத்தாட்சியும் வாங்கியுள்ளார் இவர். தற்போது சந்திரயான்-2 விண்கலம் புதிய சாதனை படைக்க உள்ளது. நான் ஏற்கனவே நிலவில் மரே இம்பிரியம் என்ற இடத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். இதனால், விரைவில் குடும்பத்துடன் நிலவுக்கு பிக்னிக் செல்வேன் என்று கூறியுள்ளார்.

Indians buy five acres of land Is this even a brawl

ஆனால் கடந்த 1979-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையில், நிலவு உட்பட விண்வெளி பொருட்கள் மீது யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என இந்தியா உட்பட 100 நாடுகள் கையெழுத்து போட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டியில் உள்ள நிலவு நிலப்பதிவு என்பது முற்றிலும் அரசு அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதை கூறி விட முடியாது. இதனால் பல்வேறு நாடுகள் கையெழுத்திட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையில் நிலவில் நிலம் விற்கும் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios