Indian woman among 31 killed as packed bus plunges into Nepal river
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்த கோர விபத்தில் 31 பேர் பலியானார்கள்.நேபாளத்தில் ராஜ்பிராஜ் என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நோக்கி 52 பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் சாலையின் ஒரு வளைவில் பஸ் திரும்ப முயன்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி என்னும் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்து கவிழ்ந்தது.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நேபாள நாட்டு ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 26 உடல்கள் மீட்கப்பட்டது. 16 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 31 பேர் பலியானதாக மீட்பு குழுவில் ஈடுபட்ட போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்கள் பெரும்பாலும் சப்திரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பலியானார் அவரது பெயர் மமதா தேவி தாகூர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
