மும்பையில், தென்னை மரம் தலையில் விழுந்து தூர்தர்ஷன் சேனலின் முன்னாள் செய்திவாசிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காட்சி சமூக ஊடகங்களில்வெளியாகி வைரலாகப் பரவியது.

தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் காஞ்சன் நாத் (வயது 58) இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மும்பையில் கன மழை பெய்து ஓய்ந்த நேரத்தில் காஞ்சன் நாத் நடைப் பயிற்சியை முடித்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரம் ஒன்று திடீரென அவர் தலை மீது விழுந்தது.

மரம் தலையில் விழுந்ததில் அந்த இடத்திலேயே காஞ்சன் நாத் மயங்கி விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பலனின்றி காஞ்சன் நாத் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சன் நாத் தலையில் மீது தென்னை மரம் விழுந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி இப்போது வைரலாகப் பரவி வருகிறது.