Railways Revenue: ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் ரயில்வேக்கு ரூ.1950 கோடி வருவாய்!

2019ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் மூலம் ரூ.1,949.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Indian Railways generate record high revenue from ticket cancellations

பயணிகளால் ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகள் மூலம் இந்திய ரயில்வே ரூ.1900 கோடிக்கு மேல் ஈட்டியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனம் 2019-2020 முதல் 2022-2023 (டிசம்பர் வரை) ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதன் மூலம் ரூ.1,949.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

Roopa IPS vs Rohini IAS: ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணியின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்

Indian Railways generate record high revenue from ticket cancellations

2021-22 நிதியாண்டில் டிக்கெட் வழங்கும் கவுன்டர்களிலும் ஆன்லைனிலும் ரத்தான டிக்கெட்டுகள் மூலம் ரூ.694.08 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதேபோல 2022-23 நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை 604.40 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

குளிரூட்டப்பட்ட வகுப்பில் நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் ரூ.30, UPI மூலம் முன்பதிவு செய்தால் ரூ.20 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குளிரூட்டப்படாத வகுப்புகளில் நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுக்கு ரூ.15, UPI பயன்படுத்தி முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் நமது கொடி பறக்க வேண்டும்; தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்

Indian Railways generate record high revenue from ticket cancellations

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர், “தற்போது, ரயில்வேயில்​ நிமிடத்திற்கு சுமார் 25,000 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு புதிய மென்பொருள் சேர்க்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.

இதேபோல, ஒரு நிமிடத்திற்கு 40,000 பரிவர்த்தனைகள் செய்யும் திறன் உள்ளது. இதனை வரும் நாட்களில் நிமிடத்திற்கு 4 லட்சம் பரிவர்த்தனைகள் செய்யமுடியும்படி உயர்த்த உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios