பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானி தமிழர் அபினந்தனை பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரும் சேர்ந்து கொடூரமாக தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த மிக் 21 ரகத்தை சேர்ந்த இரு போர் விமானங்களை தங்களது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானிகளை கைது செய்ததாகவும் அறிவித்த பாகிஸ்தான் பிடிபட்ட விமானியின் புகைப்படங்களையும் வீடியோ காட்சியையும் வெளியிட்டது. இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.  மேலும் இந்திய தரப்பில் ஒரு வீரர் தான் மாயமாகியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் இரண்டு வீரர்கள் தங்கள் பிடியில் உள்ளதாக கூறுகிறது என தெரிவித்தனர். 

கைதான விமானி அபினந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபினந்தன் தொடர்பாக மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாகிஸ்தானிடம் சிக்கிய தமிழ்நாட்டைச் அபினந்தனை ராணுவத்தினருடன் சேர்ந்து பொதுமக்களும் சேர்த்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அபினந்தனை மீட்டு தொடர்பாக இந்தியா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.