Asianet News TamilAsianet News Tamil

இந்திய கடற்படைக்கு புதிய கொடி… வெளியிடுகிறார் பிரதமர் மோடி… மீண்டும் அகற்றப்படும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ்!!

உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கத்துடன் இந்திய கடற்படையின் புதிய கொடியை பிரதமர் மோடி வரும் 2 ஆம் தேதி வெளியிட உள்ளார். 

indian navy removes st georges cross from its ensign and new ensign unveil by pm modi
Author
First Published Aug 30, 2022, 11:34 PM IST

உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கத்துடன் இந்திய கடற்படையின் புதிய கொடியை பிரதமர் மோடி வரும் 2 ஆம் தேதி வெளியிட உள்ளார். இதுக்குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கொடியானது காலனித்துவ கடந்த காலத்தை அகற்றி, இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கொடியின் விவரங்கள் இன்னும் பகிரப்படவில்லை.

இதையும் படிங்க: ரயிலில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர்.. ஐஆர்சிடிசி கொடுத்த சூப்பர் அப்டேட் .!!

indian navy removes st georges cross from its ensign and new ensign unveil by pm modi

ஆனால் அறிக்கைகளின்படி, தற்போதைய கொடியில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் புதிய கொடியில் இருக்காது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இயக்கத்தின் போது வெளியிடப்படும் இந்த கொடி இனி அனைத்து இந்திய கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்தப்படும். இந்திய கடற்படையின் கொடி மாற்றப்படுவது இது முதல் முறையல்ல. இந்திய கடற்படையின் கொடி இதற்கு முன் 4 முறை மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !

indian navy removes st georges cross from its ensign and new ensign unveil by pm modi

இருப்பினும், 2001 முதல் 2004 வரையிலான ஒரு குறுகிய காலத்தைத் தவிர, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து செயின்ட் ஜார்ஜ் சிலுவை கொடியில் உள்ளது. செயின்ட் ஜார்ஜ் சிலுவை 2001 இல் கடற்படைக் கொடியிலிருந்து அகற்றப்பட்டது. ஆனால் அது 2004 இல் மீண்டும் கொண்டுவரப்பட்டது. புதிய இந்திய கடற்படையின் கொடி இந்தியாவை அதன் காலனித்துவ கடந்த காலத்திலிருந்து பிரிக்கும் மற்றொரு படி என்று கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios