உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !
டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு ஒன்று அளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘ 2019 முதல் 2021 வரை தன ஒரு இளைஞருடன் உடலுறவில் இருந்ததாகவும், முதல்முறையாக உடலுறவு கொண்டபோது, தான் ஒரு மைனர் என்பதால், அந்த இளைஞரை போக்சோவில் கைது செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார். அதன்படி அந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்
இந்த நிலையில் அந்த இளைஞர் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தான் இளம்பெண்ணின் விருப்பத்துடனேயே உடலுறவு வைத்ததாகவும், அதோடு பெண்ணின் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் அவருக்கு மூன்று வெவ்வேறு பிறந்த தேதி இருப்பதாகவும் தெரிவித்த இளைஞர், அவர் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஜாமீன் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒருமித்த உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது துணையின் பிறந்ததேதியை ஆதார் அட்டையிலோ, பான் அட்டையிலோ ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!
மேலும் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியை வைத்துப் பார்த்தால், உடலுறவு கொண்டபோது இளம்பெண் மைனர் இல்லை என்று தெரிகிறது, அதனால் இளைஞரிடம் பணம் பறிக்கும் நோக்கிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக அனுமானிக்க முடிகிறது என்று கூறி, இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !